..."'ஏக்கத்தில்"....
.........ஏக்கத்தில்.......
காட்சியில் மறந்தாலும்....
கண்ணுக்குள் நிறைந்திருப்பவனே
அந்த நாள்..... நீ பிரிந்த.....
. மறைந்த நாள் ஆரம்பித்து.
இந்த நாள் வரை..........,
எண்ணிக்கையிலடங்குமா
என் வேதனைகளும், சோதனைகளும்.....
காலை, பகல், மாலை, இரவு,
எல்லாப் பொழுதுகளிலும்,
என் கண்களும் மூடவில்லை,
கன்னங்களும் காயவில்லை...
சொல்லி மாளாது... சொல்லிலும் அடங்காது
என் சோகங்களும், தொடர்ந்திடும் வேதனைகளும்..
வெந்தணலில் என்னைத் தள்ளிய விதிக்கு
விளையாட வேறு யாரும் கிடைக்கவில்லையா?
வாழ்க்கைப் பயணம் வரை வழித்துணையாய்
வருவாய் நீயென்று வழிமேல் விழி வைத்து
காத்திருக்கையில்..........
இரயில் பயணி போல், இடையிலேயே
உன் பயணத்தை நிறுத்திவிட்டாயே...
நெடுந்தூரம் நீ சென்று விட்டதால்
நிம்மதியிழந்து, சந்தோஷமிழந்து, வலுவிழந்து,
சகலமும் இழந்து சமாதியில் அடங்குமுன்
சமாதியாகி விட்டேனடா...
விதியெழுதிய எழுத்துக்கு விடை காண முடியவில்லை.
பழகிய காலம் நெஞ்சில் இனிக்கின்றது....
அதனாலேயே, மீண்டும் மீண்டும் வலிக்கின்றது...
உன் கையணைப்பில் நான் இருக்க காத்திருக்கையில்,
வெட்டவெளி வானத்தில் வெகுதூரம்
பறந்து விட்டாயடா.......
பறந்து வந்து உன்னைச் சேர,
பாழும் சிறகு எனக்கில்லையடா.......!!