...மௌன ராகம்....

...........மௌன ராகம்..........

வஞ்சனையின்றி வழிகின்றன,
விழிகளிலிருந்து கண்ணீர்.....
வாஞ்சையுடன் துடைக்க,
உன் வலுவான கரங்கள் நீளும்போது,
கண்ணீருக்கு இடம் கொடுத்த
என் கன்னங்களும்,
புளகாங்கிதம் அடைகின்றன.
உன் தொடுதலின் பரவசம்,
உச்சந்தலையிலிருந்து,
உள்ளங்கால் வரை ,
உயிரோட்டத்தை குளிர வைக்கின்றது....
இந்த இனிமை எனக்கான உரிமை.
இந்த பரவசம் நீடிக்கணுமே........
நீ திட்டுவது போல் நடி,
நான் அழுவது போல் நடிக்கின்றேன்..
நம் மௌன ராகங்கள்
மென்மையாக மீட்டப்படட்டும்....!

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (12-Mar-13, 8:06 am)
Tanglish : mouna raagam
பார்வை : 112

மேலே