நிலவே நிலவே.....!!!!

சாயும் காலம் சாயும் நேரம்,
காயும் நிலா காயம் தீர்க்கும்..
அது தீயும் நீரும் சேர்ந்த கலவை,
ஆனால், தேயும் நிலா, அது தான் தொல்லை..

வெண் வட்ட பொட்டை, வான் நெற்றியிலிட்டு,
வெட்டவெளிக் குளிரில், அதைத் தனிமையில் விட்டு,
கட்டித் தழுவ ஆசை மட்டும் போதுமா,
எட்டிப் பிடிக்க ஏகாந்தம் ஆகாது..

காற்று வீச ஆடிடாத,
கருங் கூந்தல் மல்லி உன்னை,
காதல் கொள்ள ஆள் இல்லையோ,
கலையாக இருந்தும் கலையாமலிருக்கிறாய்..

எழுதியவர் : பிரதீப் (13-Mar-13, 5:11 pm)
பார்வை : 91

மேலே