நண்பனின் அன்பு .....?

நண்பா ...!
நான் அழுத போது
எனக்கு ஆறுதல் சொல்லி
நீயும் அழுதாய்
இப்போது நீ அழுகிறாய்
உன் கண்ணீரை துடைப்பதற்கு கூட
நான் உன்னருகிலில்லை...
வெளிநாட்டு வேலையென்று ..
வெடுக்கென்று வந்து விட்டேன்

சோகம் என்பது நமக்கு
என்றுமே நிரந்தரமில்லை
என்பதை இன்றாவது புரிந்து விடு...

நிரந்தரமில்லாத ஒன்றிற்காக
தயவு செய்து கண்ணீர் சிந்தாதே
என் இதயத்திற்கு வலிக்கிறது...
நண்பா காதல் அன்பு காலத்தால் குறையும்
நண்பனின் அன்பு கல்லறையிலும் தொடரும் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (14-Mar-13, 4:30 pm)
பார்வை : 621

மேலே