பிழை திருத்துக விமரிசனம் எதிர் கொள்க --கவின் சாரலன்

உனது கவிதையின் கருப் பொருள் சரியானதாக
இருக்குமாயின் கவிதையை உனக்குப் பிடித்த முறையில் வடிவமைத்திருந்தால் எந்த விமரிசனத்தையும் எதிர்த்து நிற்பதே நற் கவிஞனுக்கு அழகு.

வேசியைப் பற்றி எழுதிய கவிதை வெகுமதி பெறலாம். அதே சமயத்தில் கங்கையைப் பற்றி எழுதிய கவிதை தூசி என்று வீசி எறியப் படலாம் . வேசியும் கங்கையும் சொல்லும் கவிஞனுக்கு வெறும் கருப் பொருளே. சொல்லுகின்ற
விதத்தில்தான் அது கவிதையாக உருப் பெறும்.

எழுத்துப் பிழையோ சொற் பிழையோ பொருட் பிழையோ சுட்டிக் காட்டப் பட்டால் திருத்துவது எழுதுகிறவனுக்கு இலக்கிய நாகரீகம். கௌரவ பிரச்சினையாக கருதி இறுமாப்புடன் அவ்வாறு செய்யாதவன் தனக்கும் தமிழுக்கும்
தீங்கிழைப்பவன் . இலக்கிய இழுக்கானவன்.
விமரிசனத்தை எதிர்கொண்டு தன் நிலையில் உறுதியாக நின்று நிறுவத் தெரியாதவன் நீக்கி விட்டு ஓடித் தப்பிபவன் முதுகெலும்பு இல்லாதவன். கவிதைக்கு தகுதியில்லாதவன் .
இவர்கள் கவிதை எழுதுவதை விட கழனியில் சென்று குழை மிதிப்பது சாலச் சிறந்தது.
பசுமைப் பயிராவது நன்கு வளரும்.

-----கவின் சாரலன்
கவிக் குறிப்பு:

மன உலைச்சலான கருத்துகளால் கவிதையை நீக்குகிறீர்களே இது ஒரு படைப்பாளிக்கு அழகா ?

மணிகண்ட சுகன் எழுப்பிய இக் கேள்விக்கு
நான் எழுதிய பதில் ---இங்கே உங்கள் ஒவ்வொருவருக்காகவும்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-13, 8:34 am)
பார்வை : 197

மேலே