நல்ல செய்தி வரும்...நல்ல செய்தி வரும் - ப.சிதம்பரம்...! மே - 15 அன்று சொன்னீர்களே...அது போலவா...?

நல்ல செய்தி வரும்...நல்ல செய்தி வரும் - ப.சிதம்பரம்...! மே - 15 அன்று சொன்னீர்களே...அது போலவா...?

சுதந்திரமான நம்பகத் தன்மை மிகுந்த ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்ற வாசகம் இருந்தால் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தான் இவ்வாறு பேசினார் ப.சிதம்பரம் அவர்கள்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சுதந்திரமான நம்பகத் தன்மை மிகுந்த ரூ விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த தீர்மானத்திலே இருந்தால், அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இந்தியா அந்த தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். இந்தியா அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனபது நம்முடைய குரல் ..நம்முடைய வேண்டுகோள்...22 - ம் தேதி வரை நீங்கள் பொறுமை காக்க வேண்டும்.

22 - ம் தேதி நல்ல செய்தி வரும்...நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..எனக்கும் இருக்கும் நம்பிக்கையை உங்களுக்கு நான் ஊட்டுகிறேன்...உங்களுக்கும் அந்த நம்பிக்கை வர வேண்டும். உங்களுக்கு உள்ள நம்பிக்கையை உங்களுடைய அடுத்த வீட்டுக்காரருக்கு ஊட்ட வேண்டும். அவருக்கு அந்த நம்பிக்கை வர வேண்டும். எல்லோரும் மாணவர்கள் மத்தியிலே இன்று தொடங்கி வரும் 22 - ம் தேதி வரை ஊட்டுங்கள் என்று காரைக்குடியில் கூறினார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
சுவாமி நித்தியானந்தா கூறுவதைப் போல கூறினார்...நீ முதலில் நம்பு..பிறகு அவர் நம்புவார்..அவர் அடுத்த வீட்டுக்காரர்..என்று நீண்டு மாணவர்களிடம் சொல்ல வேண்டுமாம்.. இவரும் மத்திய அரசும் வேறு வேறு போல சொல்கிறார்..இதுதான் இவரின் உலகமகா நடிப்பும் ஏமாற்று வேலையும்...!

2009 - மே 15 - ம் அன்று இவ்வாறு கூறினார் ப.சிதம்பரம் அவர்கள்...இன்னும் ஒரு இரண்டு நாளில் நல்ல செய்தி வரும் என்று கூறினார்...மே - 17 அன்று இவருக்கும் இவரது காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செய்தி வந்தது...தமிழக மக்கள் அனைவருக்கும் மிக மிக கெட்ட செய்தியாக அது இருந்தது. இலங்கைத் தமிழர்கள்...உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அவர்களது வாழ்நாளில் கேட்ட கெட்ட செய்தியும் அதுதான்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (18-Mar-13, 2:34 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 112

மேலே