இத்தாலி தூதர் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டும் - காங்கிரஸ் அரசும் - சி.பி.ஐ.- யும்....?!

இத்தாலி தூதர் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டும் - காங்கிரஸ் அரசும் - சி.பி.ஐ.- யும்....?!

மறு உத்தரவு வரும் வரை பேச்சு மூச்சு விடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு என்று இன்று செய்தியை சொன்னார்கள்...அரபிக் கடலில் அதுதான் கேரள கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரு கேரள மீனவர்களை அந்தப் பக்கம் வந்த இத்தாலிக் கப்பலில் இருந்த இத்தாலி கடற்படையினர் ஒரு எச்சரிக்கையும் செய்யாமல் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்..இந்திய நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கேரள அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தக் கப்பலை கரைக்கு இழுத்து வந்து அந்த இருவரையும் கேரள சிறையில் வைத்தார்கள் இவையெல்லாம் நாம் அறிந்த சம்பவங்கள்...இதில் நாம் அறியாத உண்மை என்னவென்றால்....

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன் அமெரிக்க ஐரோப்பிய ( ஒரு உப்புக்கு சப்பாணியாக இந்தியக் கப்பல் படையையும் இலங்கை கப்பல் படையையும் சேர்த்துக் கொண்டார்கள் ) கப்பல் படை கூட்டுப்பயிற்சி நடத்தினார்கள்..
என்ன பயிற்சி நடத்தினார்கள் என்றால், கடல் கொள்ளையர்கள் மற்றும் கடத்தல்காரர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது..? அவர்களுக்கு எதிராக தற்காப்பு முறைகளை எப்படி கைக்கொள்வது என்று பயிற்சி எடுப்பதாக சொன்னார்கள்...அந்தப் பயிற்சியில் இவ்வாறு கொள்கை நெறிமுறைகளை வகுத்துக் கொண்டார்கள்...

கடலில்... நடுக்கடலில் முன்பின் தெரியாதவர்கள் சிறு படகுகளிலோ...விசைப் படகுகளிலோ கப்பலின் அருகிலோ அல்லது தொலைவிலோ சந்தேகப்படும் படியாக வந்தால் கைது, விசாரணை, எச்சரிக்கை எதுவும் தேவையில்லை...குருவி காக்கை சுடுவதைப் போல சுட்டுத் தள்ளுங்கள் என்று பயிற்சி கொடுத்தார்கள்...இந்த இத்தாலி கப்பலில் இருந்த கப்பல் படையைச் சார்ந்த இருவரும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியின் அடிப்படையில் மீன் பிடிக்க வந்த இரு கேரள மீனவர்களை சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்...எப்பேர்பட்ட பயிற்சி.... எப்பேர்பட்ட அறிவாளிகள்..? எல்லா மிலிட்ரிக்காரனும் சொல்லி வைத்தாற் போல ஒருசேர.... ஒரே ரவுடிக்கூட்டமாக பன்றிக்கூட்டமாக இருக்கிறதே...? பிறகு என்ன நடந்தன என்பதை அனைவரும் அறிவோம்...இருக்கட்டும் இவைகள்..!

இந்நிலையில் இத்தாலியில் சாப்பர் வாங்கிய விவகாரம் ஊடகங்களில் பாராளுமன்றத்தில் நர்த்தனம் ஆட ஆரம்பித்து விட்டன..ஒரு சாப்பருக்கு நூறு கோடி ரூபாய் வீதம் 13 சாப்பருக்கு 1300 கோடி ரூபாய் என்று தானே இருக்க வேண்டும்..3500 கோடி ரூபாயை அள்ளி வீசி இருக்கிறார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள்..இந்த விவகாரத்தை இத்தாலியின் பாராளுமன்றத்தில் கிளப்பவே...பிறகுதான் நடந்தவைகள் அனைத்தும் தெரியுமே...வழக்கம் போல பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏனைய மந்திரிகளும் அப்படியெல்லாம் நடைபெறவில்லை என்றார்கள்...ஆதராம் வெளிவந்தவுடன் ஆக்சன் எடுப்போம் என்றார்கள்...
ஒரு பிரச்சனையா இரண்டு பிரச்சனையா...ஆக்சன் எடுப்பதற்கு..?

சிறையில் இருந்த இரு இத்தாலி சிப்பாயும் எங்கள் ஊரில் எலக்சன் நடக்கிறது எங்களுக்கு ஓட்டு போட வேண்டும்..எனவே அனுமதி வேண்டும்..ஓட்டுப் போட்ட கையேடு இந்திய சிறைக்கு வந்து விடுவோம் என்று அனுமதி கேட்க...சுப்ரீம் கோர்ட்டும்...
இதுதாண்டா சமயம் என்று கருதி அனுமதி வழங்க...நம்ம சி.பி.ஐ. யும் காங்கிரஸ் கட்சியும் ஒரு திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கையில்...இத்தாலி அரசு எங்கள் வீரர்களை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று கூறிவிட...சுப்ரீம் கோர்ட்டும் களத்தில் குதிக்க...இத்தாலி நாட்டு தூதர் எங்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட...
மேலும் இத்தாலி அரசு மோசடி செய்யக் கூடாது என்று சொல்ல...ஆக, சி.பி.ஐ.மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் சுப்ரீம் கோர்ட் மூவருமாக கைகோர்க்க... பழம் நழுவி பாலில் விழ...அந்தப் பாலும் நேரடியாக வாயில் விழ என்று போய்க் கொண்டிருக்கிறது அந்த 3600 கோடி ரூபாய் விவகாரம்...!

இந்த இத்தாலி தூதர் விவகாரத்தில் ஒரு பஞ்சாயத்து வேண்டுமல்லவா...அந்த இருவரை விட்டு விடுகிறோம்...பதிலுக்கு அந்த சாப்பர் விவகாரம்...மக்கள் அனைவரும் முட்டாள்கள் அல்லது அதற்கும் மேலே என்று கருதுகிறார்களோ..? இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (18-Mar-13, 4:41 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 116

மேலே