மரங்களை பாடி விட்டீர்கள், மனிதனை எப்போது பாடுவீர்கள்?

கோடான கோடி
மரங்களை ஒரேயொரு
நல்லெண்ணம் கொண்ட
மனிதனால் முளைக்க
வைக்க இயலும்!

ஒரேயொரு மனிதனையாவது
கோடான கோடி
மரங்களால் பிறக்க
வைக்க இயலுமா?

நம்மை சுற்றி
அநியாயங்களும் அக்கிரமங்களும்
நடக்கும் வேளைகளில்
தட்டி கேட்காமல்
கண்டும் காணாது
போல் நமக்கென்ன
என்று நின்றிருப்போர்

வள்ளுவர்,ஔவையார்,
பாரதி கூறியது
போல் மக்கள்
பண்பில்லாதார் மரங்களை
போன்றோர் தானே?

மரங்கள் மனிதனை
காட்டிலும் நிச்சயம்
மட்டம் தானே?

மரங்களை பற்றி
கவி எழுத
கோடான கோடி
மனிதர்கள் உள்ளனர்!

மனிதை பற்றி
கவி எழுத
ஒரேயொரு மரமாவது
உலகில் உள்ளதா?

இல்லை மரத்தால்
எழுதத்தான் முடியுமா?

பொய்யால் நன்மை
ஏற்படும் எனில்
அப்பொய்யையும் வாய்மையென
வள்ளுவர் கூறினார்

அதை தாங்கள்
படித்து விட்டு
எங்களுக்கோ கவிதைக்கு
பொய் அழகு
என கூறுவது
நியாயம் தானா?

ஆட்டு பால்
குடித்தால் அறிவு
அழிந்து போகும்
என்கிறீர் அப்படியெனில்
அதை குடித்த
மகாத்மா அவர்களின்
அறிவு அழிந்த
காரணத்தால் தான்
உங்களுக்கும் எனக்கும்
சுதந்திரம் பெற்று
தந்தார் என்கிறீரோ?

திரைப்படத்திற்கு கவிதைகள்
எழுதியது போதும்
நிஜ வாழ்க்கைக்கு
கொஞ்சமாய் கவிதை
எழுதுங்களேன்!

ஈழத்தில் நம்
உடன் பிறப்புக்கள்
சுவாசிக்க காற்று
இல்லாமல் மூச்சி
திணறிய படி
நம்மை நோக்கி
யாசித்து காத்து
நிற்கிறார்கள் ஐயா!

அவர்களுக்காய் நம்
நாட்டில் போராடிக்கொண்டிருக்கும்
உத்தம உள்ளங்களை
ஊக்கப்படுத்தும் வகையில்
ஒரு கவிதையாவது
எழுதி விடுங்களேன்!


இப்படிக்கு

தங்கள் கவிதைகளின் பரம விசிறி

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (19-Mar-13, 2:32 pm)
பார்வை : 371

மேலே