புத்தகமே!..பொற்குவியல்கள்..!

புத்தகமே!..பொற்குவியல்கள்..!
------------------------------------------
முதன் முதல் புத்தகம் எழுதப்படத் தொடங்கியது எப்போது முதல் என்பதை அறிவது கடினம். சுமேரிய/பாபிலோனிய நாகரிக காலத்தில் களிமண் பலகைகளில் எழுதி, அவற்றைத் தீயில் சுட்டுப் புத்தகங்களாகப் பாதுகாத்தனர்.பனை ஓலைகளின் ஆணி கொண்டு எழுதித் தொகுத்துப் புத்தகமாகக் கட்டிப்பாதுகாத்தனர்.

காகிதமும் அச்சு முறையும் தோன்றிய பிறகே புத்தகத் தயாரிப்பு சூடுபிடித்தது எனலாம். சமீப காலத்தில் கணினி அச்சு மற்றும் அது தொடர்பான நவீனத் தொழில் நுட்பம் தோன்றி விரிவடைந்த பிறகு அச்சுத் தொழில் மற்றும் புத்தக வெளியீட்டில் அபரிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கிரேக்க நாட்டில் யூக்ளிட் என்று ஓர் அறிஞர். புத்தகம் எழுதுவதில் அசகாய சூரர்.!
தனது சிந்தனைகளை கி.மு.300லேயே எழுத்தில் வடிவமைத்தார். அச்சு முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டன. அந்த நூல் அன்று முதல் இன்று வரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறு பதிப்புகளைக் கண்ட ஒரே நூல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

அரிஸ்டாடில் ஒரு மாபெரும் தத்துவ ஞானி. ஆனால் அவருடைய எண்ணங்கள் மக்களைச் சென்றடைய அவர் அதிர்ஷ்டத்தை நாடவேண்டிதாயிற்று. இயேசு கிறிஸ்துவுக்கு 80ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியப் படைவீரன் ஒருவன் தற்செயலாக ஒருகுகையினுள் கையெழுத்துப் பிரதித் தொகுப்பு ஒன்றைக் கண்டெடுத்து, அதைத் தனது தளபதி சூல்லாவிடம் சென்று கொடுத்தான் .அவை அரிஸ்டாடிலின் சிந்தனைக் கருவூலம் என்பதை அறிந்த சூல்லா தானே அதை மீண்டும் எழுதினான். பிறகுதான் அந்தக் கருவூலம் மக்களை அடைந்தது.

புத்தகங்கள் எத்தனை முக்கியமோ அதை விட முக்கியமான இடம் அவற்றைப் பாதுகாத்துப் பயன்படுத்தும் நூலகங்கள்...!

எழுதியவர் : Anbuselvan (20-Mar-13, 2:34 am)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 193

மேலே