உயிர்ப்பு
நான் கண் இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றிலும்
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
நான் என் காதலையே உணர்கிறேன்..
காதல்...அது உன்னையன்றி வேறு எவரும் இல்லை....
நான் கண் விழிக்கும் ஒவ்வொரு காலையும்
இந்த நாள் என்னுடையது என்று உணர மறுக்கிறேன்...
ஆனால்,என் கண்கள் உன்னைக் கண்ட அந்தக் கணமே,
என் செவிகளில் உன் அன்புக் குரல் கேட்ட அந்த நொடியே,
என் வாழ்க்கை மேலும் அழகானதை உணர்கிறேன்
இந்த உலகமே அர்த்தமாதல் கண்டேன்
ஏனெனில்,நீ என் இதயத்துள் வாழ்கிறாய்...
என் உயிராக...
உனக்காகவே உயிர்க் கொண்டேன்
உன்னாலே என் பெண்மையின் அர்த்தம் உணர்ந்தேன்
உன் காதலின் ஆழம் புரிந்தேன்
என் ஜீவனை உனக்கென கொடுத்தென்
உன் மூச்சில் நான் வாழ்கிறேன்
உன் விழிகளில் என்னைக் கண்டேன்
அந்தக் கணமே என்னை உனக்கென அளித்தேன்...