ஐ.நா.சபையில் இலங்கை மீதான அமெரிக்கா கொண்டு வரும் டுபாக்கூர் தீர்மானம் ...நாளை...!

ஐ.நா.சபையில் இலங்கை மீதான அமெரிக்கா கொண்டு வரும் டுபாக்கூர் தீர்மானம் ...நாளை...!

ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கவுன்சிலில் தான் அமெரிக்கா அரசு கொண்டு வரும் தீர்மானம் நிறைவேற உள்ளன. சென்ற வருடம் இந்த தீர்மானம் ஐ.நா.வின் இதே கவுன்சிலில் தான் நிறைவேறியது...இந்த தடவை அதே தீர்மானத்தை கொண்டு வரவில்லை அமெரிக்க அரசு..இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பாராட்டி வாழ்த்து சொல்லியிருக்கிறது இந்திய அரசு..இப்படி வாழ்த்தும் பாராட்டியும் உள்ள தீர்மானத்தை தான் அமெரிக்க அரசு கொண்டுவரப் போகிறது. ஆக, சென்ற வருடம் கொண்டு வந்த அதே தீர்மானம் இல்லை இது என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா...?

இந்த தீர்மானத்தில் நவநீதம் பிள்ளை சர்வதேச குழு ஒன்று விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு வரியை சேர்த்து இருந்தார்கள் மனித உரிமை ஆணையர் மற்றும் அவர்களது குழுவினரால்...இப்படி ஒரு வரியையா சேர்த்து உள்ளீர்கள் என்று கோபம் கொண்ட காங்கிரஸ் அரசு அந்த வரியை மாற்றியது..

முதலில் இந்த அறிக்கை அதாவது கண்டன தீர்மான அறிக்கை மார்ச் மாதம் 12 - ஆம் தேதி சுற்றுக்கு விட்டார்கள்...இந்த தேதியில் தான் அறிக்கையில் உள்ள சர்வதேச விசாரணை என்ற வரியை எடுத்தார்கள் காங்கிரஸ் அரசினர்...பிறகு 18 - ஆம் தேதி மீண்டும் திருத்திய அறிக்கையை சுற்றுக்கு விட்டார்கள்...அன்றைக்குத் தான் இலங்கையின் எல்.எல்.ஆர்.சி.க்கு
வாழ்த்தையும் பாராட்டையும் சேர்த்தார்கள் இந்திய அரசின் அமைச்சர்கள் அதிகாரிகள். இந்த அறிக்கை குறித்து அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதித்து திரும்பவும் இதுபோன்றே கிச்சு கிச்சு மூட்டுவார்கள் அமெரிக்க ஐ.நா.
அதிகார்களுடன் இந்திய சிங்கள அரசுகளும் என்று நம்பலாம்...இவர்கள் விளையாட்டில் ஈழத்தில் உள்ள எஞ்சிய தமிழன் நோயிலும் பசியிலும் செத்தே போய்விடுவான்...

பிறகு ஆளே இல்லாத கடையில் எதுக்கையா இவ்வளவு விளக்கும் அலங்காரமும் என்ற கதையாகிவிடும்...!

பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாய் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்ப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சென்று ஆலோசனை செய்தார்கள் என்று ஒரு செய்தியையும் சொல்கிறார்கள்.

நாளை ஐ.நா.தீர்மானம் வரும் வேளையில், 2 G விசாரணையின் முடிவும் வெளிவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்கோ தலைமையில் விசாரணை துவங்கினார்கள் அல்லவா...அந்த விசாரணையின் முடிவை நாளை சொல்கிறார்கள்..அனேகமாக
அ. ராசா தான் அனைத்தும் என்று சொல்லிவிடுவார்கள்...அ.ராசாவும் கனிமொழி அம்மையாரும் திரும்பவும் திகார் செல்ல வேண்டியது தான்.

இப்பொழுது தெரிந்திருக்குமே...கூட்டணி பிளவும் அமைச்சர் பதவியை துண்டை தூக்கிப் போட்டதைப் போல போட்டது என்று...எனவே தான் திமுக கருணாநிதி அவர்கள் நாளை வரை கூட்டணிக்கு கெடு விதித்திருந்தார்...அதிலும் உறுதியான நம்பிக்கையில்லாமல் தான் வட நாட்டு ஊடகங்களுக்கு 2G குறித்த ஆவணங்கள் அள்ளி அள்ளி வழங்கிக்
கொண்டிருக்கிறார்கள்...என்றும் நம்பலாமா...?

நாட்டு மக்கள் என்றில்லை...இலங்கைத் தமிழர்கள்..தமிழக தமிழர்கள்..புலம் பெயர் தமிழர்கள்...உலகத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் வாயிலை பார்த்துக் கொண்டும்...தமிழகத்தில் உள்ள மாணவர்கள் ஐ.நா.தீர்மானம் குறித்து கடும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில்.... காங்கிரஸ் கட்சியும் திமுகவும் எப்படி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உங்களால் நம்ப முடியுமா...?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (20-Mar-13, 3:39 pm)
பார்வை : 143

சிறந்த கட்டுரைகள்

மேலே