எச்சரிக்கை
பனி கட்டி உருக ஆரம்பித்தால்
தண்ணீர் ஆகி
நீரோட்டமாக எதையெதையோ
தள்ளிக்கொண்டே இஷ்டப்படி
தனக்கு பிடிக்கும்
பாதையைப் பின்பற்றும்.
உணர்வுகளும் அப்படித்தான்
சற்று உஷ்ணத்தைக் கொடுத்தால்
புறப்பட்டுவிடும் நீரோட்டமாக
எல்லாவற்றையும் தள்ளிக்கொண்டே.