பாரதி சிந்து
எட்டைய புரம்பி றந்தோனை
........எங்கள் மகாகவி பாரதியை,
பாட்டினில் வைத்துநாம் பாடிடுவோம்
........பாசமுடன் கும்மி தட்டுங்கடி..!
ஆலேலங் கும்மி ஆலேலோ..!
........ஆலேலங் கும்மி ஆலேலோ..!
ஆலேலங் கும்மி ஆலேலோ..!
........ஆலேலங் கும்மி ஆலேலோ..!
வீரசு தந்திரம் வேண்டுமென்று-அவன்
........வீதிதோறும் சென்று முழக்கமிட்டான்..!
சாதிக ளில்லையெனச் சொன்னவனுக்கு,
........சந்தோசமாய் கும்மி கொட்டுங்கடி..!
(ஆலேலங் கும்மி ).!
நிவேதிதையை குருவாய் கொண்டவனை
........நீதிவழி கண்டு நின்றவனை
நித்தமும் நித்தமும் பாட்டெழுதி-அதை
........நித்தமும் கும்மிய டியுங்கடி!
(ஆலேலங் கும்மி)
பாட்டுத்தி றத்தால் வையகத்தை
........பாடித்தந்த மகா பாரதியை
நாட்டினில் அவன்புகழ் பாடிப்பாடி
........நன்றாகக் கும்மி யடித்திடுவோம்.!
(ஆலேலங் கும்மி)
...........................................பசுவைஉமா
(இந்த கும்மிப் பாடலைட கேட்க youtube -ல் pasuvaiuma என்று டைப் செய்து பாரதி சிந்து என்பதை சொடுக்கவும் )

