வரலாற்று சரித்திரங்கள்

வாழ்ந்து மறைந்த இவர்கள் ஒரு
வரலாற்று சரித்திரங்கள்

எங்கள் கண்ணப்பாவும், மும்மாவும்
பண்ணை வீட்டு மாணிக்கங்கள்

இந்த நேச மலர்கள் பெற்றெடுத்த
பாச மலர் எங்கள் தாயார்

செல்வதில் ஒரு குறைவில்லை
அந்தஸ்தில் இன்னும் உயர்ந்தநிலை

பண்ணை வீட்டின் செல்வமகளாய்
எங்கள் தாயார் மகுதூம் பீவி

இன்னும் பத்து செல்வங்களை
பெற்றெடுத்த மகராசி கதிஜா பீவி

ஆஸ்தியை பார்த்ததில்லை - அன்று
உலாமாக்களின் உயர்ந்த நிலை

தொழுகை நடத்திய இனிய குரல் கேட்டு
திருமகனாய் அத்தா குடும்பத்தின் மருமகனாய்

வானூர்தி இல்லா காலத்திலும் கடல் கடந்து
சென்று ஒட்டகத்தில் ஹஜ்ஜை நிறைவு செய்த

அப்துல் லத்தீப் ஹாஜியார் என்றால் - அன்று
அறியாதவர் இல்லை அமானிய நகரில்

கவுரவமாய் வந்த மருமகனுக்கு அந்த நாளில்
கொழும்பில் வணிகம் அமைத்து தந்து

கண்ணியமாக மருமகனை வைத்த எங்கள்
கண்ணபாவின் உயர்ந்த உள்ளம்

இன்னும் வாழையடி வாழையாய் இந்த
வம்சம் வளர்ந்து வரும் அத்தா வழியில்

இந்த சரித்திரங்கள் வாழ்ந்தது போல்
அவர்கள் வழி சுவடு வழியே

வாரிசுகளாய் ........ நாங்கள்

மகள். நயீமா நாச்சி , பேரன்கள்.

எழுத்தாக்கம்
ஸ்ரீவை.காதர் .

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (22-Mar-13, 9:51 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 150

மேலே