உடலும் உள்ளமும்

உயிரின் இறுதி அணு வரை
ஓய்வெடுக்கத் துடிக்கும்
இரவின் ஆளுமையில்....

உடலும் உள்ளமும் ஓய்வு ஓய்வு
என்று புலம்பும் நிலை.....

இரவின் பிடியில் சிக்கித் தவிக்கும்
படபடக்கும் கண்கள்....

ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல்
நடந்த அனைத்து சம்பவமும்
கண் முன்னால் அனகோண்டா
ஆட்டம் போடுவது போல
ஆட்டம் போட....

மேல் இமை கீழ் இமைக்கு
சொந்தமில்லை..........

தூங்கினால் கனவு வரும்
தூக்கத்திற்கு வழி இல்லை.......

எந்த பாவமும் அறியவில்லை....
ஆனால் தூக்கமில்லாத நிலை ஏன்?

தூக்கமும் வரம்தான்...
அதற்கும் தவம் செய்திருக்க வேண்டுமோ?....

எழுதியவர் : சாந்தி (23-Mar-13, 8:47 pm)
பார்வை : 174

மேலே