இவலும் ஒரு பெண்
திருட்டு முழி குருட்டு பார்வை
கிழட்டு பூனை மாமியார்களின்
அன்றாட ஆசிட் வார்த்தைகளை
நெருப்பு கோழியாய் தினம் விழுங்கி
வறட்டு நாத்திகளின் நெருப்பு வார்த்தைகலால்
தினம் குளித்து வரதட்சணை வாங்கிய
தாலிகட்டிய ராமன்களுக்கு
முகம் கோணாமல் கட்டில் அரையில்
தொட்டிலுக்காய் காத்து கிடக்கும்
இவலும் இன்றைய பெண் தானே

