............நீ..........நீ..............

நான் பிரிந்துபோனால் அதன்பின்,
நிலைக்குமா என்மீதான காதல் ?
கேட்ட மறுவினாடி பதில் வந்தது,
நானெங்கே என்னிடம் இருக்கிறேன் ?
பதிலை நீதான் சொல்லவேண்டும் !
ஒரேதடவையில் என் உயிரை,
சுருட்டிச்சென்ற சுனாமியாயிற்றே நீ !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-Mar-13, 9:12 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 67

மேலே