வரவேற்கிறோம் ..வாழ்த்துவதற்கு..!! பொள்ளாச்சி அபி

ஒரு படைப்பாளி தனது முதல் நூல் வெளியிடப்போகும் நிகழ்வு பற்றிய செய்தி...

ஒரு பெருமிதத் துள்ளளோடு இதை எழுதுகிறேன்..
அளப்பரிய உவகையில் என் மனம் நீந்துகிறது...
தளத்தின் படைப்பாளி ஒருவரின் முதல் நூல் வெளியீடு...!!!

முதல் எதுவும் மகிழ்ச்சி கொம்புக்குள் அடங்கா .மலர்க்கொடி..முதல் காதல் ...முதல் முத்தம் ...முதல் மழலை. முதல் ஊதியம்...முதல் நூல்....!!
இனப்பற்றின் இள ஏந்தல் எனும் பட்டமும் இத்தளத்தில் பெற்ற என் தோழன் முதல் நூல் வெளியிடுவது எனக்கு பேரின்பம்...

@@@@@@@@@@@@@@@@@@@

நூலின் பெயர் எனக்கு அளப்பரிய ஆனந்தம் அளிக்க காரணம்.இத்தளத்தின் ஒன்றுபட்ட ஒற்றுமையின் அடையாளமாய் அனைவரும் ஒன்றிணைந்து வெளிக்கொண்டுவந்த இத்தளத்தின் முதல் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள தனது கவிதையான \"அத்தருணத்தில் பகை வீழ்த்தி \"எனும் கவிதையையே நூலின் தலைப்பு..,எனும் போது நமது தொகுப்பிற்கும் நமது அன்பிற்கும் நமது ஒற்றுமைக்குமான அடையாளமாய் இந்நூலைக் கண்டு மகிழ்க்ச்சியில் துள்ளுகிறது மனம்..

@@@@@@@@@@@@@@@@@@@

நாள்:30.03.2013
காலம்:மாலை மணி ஐந்து
இடம்: வடபழனி, இசைக்கலைஞர் அரங்கம்,சென்னை
பங்கேற்பு:
பா.ஜெயபிரகாசம்
மனுஷபுத்திரன்
பாமரன்
நூலின் பெயர்:அத்தருணத்தில் பகைவீழ்த்தி....

*************************************************************
நூல் ஆசிரியர்:இனப்பற்று இள ஏந்தல்.
தோழர். அகரமுதல்வன்..
*************************************************************

சென்னையில் உள்ள நம் தோழர்கள் அனைவரும் அவசியம் விழாவில் பங்கேற்க வேண்டும்..மற்றவர்களும் கூடத்தான்...

வாழ்த்துவோம் வாரீர்..!!

எழுதியவர் : அகன் (28-Mar-13, 9:52 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 126

மேலே