ஒரு வார காதல்

திங்களில் முகம் காட்டி

செவ்வாயில் வாய் மலர்ந்து

புதனில் பொன்னகை அணிந்து

வியாழனில் விண் உயர்த்தி

வெள்ளியில் வீதி உலா செய்து

சனியில் தனித்து விட்ட மாயமென்ன

ஞாயிறில் வாரம் முடிந்து விட்டது என

உணர்த்தி விட்டு சென்றனையோ

எழுதியவர் : (29-Mar-13, 10:41 am)
சேர்த்தது : sankaranarayan
Tanglish : oru vaara kaadhal
பார்வை : 69

மேலே