விடை தெரியா பயணம்

பிறப்பெங்கோ.. இறப்பெங்கோ
வளர்பிவ்விடம் வாழ்க்கை எவ்விடம்

மனமிணைக்க பாதையில்
பரவலாக பட்டியலிட்டு
பவ்வியமாய் தேடி திரிந்து
விருப்பு வெறுப்புகளுக்கு
அப்பாற்பட்டு
விதிஎன்றோ விளையாட்டென்றோ
விரும்பி இணைக்க
விளையாட்டாய் தொடர்ந்தது
இந்த விடை தெரியா பயணம்

ஆறடி உயரத்தை அரைநொடியில்
என்னில் தொலைக்க
ஆனந்தமாக போர் புரியும்
உன்போக்கை என்னவென்பது

இத்துணை தளத்தில்
ஏனென்று எனை தேர்ந்தாய்
ஏற்கவில்லை என்மனம்

அழகும் அறிவும் என்னில்
கடலின் ஆழம் - உனக்கோ
உள்ளங்கை கனி
ஏன் இந்த நஷ்டம் உன்வாழ்வில்
புரியவில்லை இந்த புதிர்

பொய்கொண்டோ மெய் என்றோ
தெரியவில்லை -உன்
இளகிய மனதின் இனிய பயணம்
பயமில்லை மனதில்

இருந்தும் தொடர்கிறோம்
தொடர்கதையாக
பாதி நாள் பிடித்தும்
மீதி நாள்விரும்பாமலும்
பிடித்தால் பேசியும்- இல்லையெனில்
விதண்டாவாதமாய் பேசியும்
கடக்கிறது காரணம் தெரியாமல்

விட்ட தொட்ட குறையாக தொடருது
சேரும் இடம்தெரியா பயணம்
நெருப்பாய் நானும்
பஞ்சாய் நீயும்
எட்டியிருந்தாலும் எரிந்துவிடும்
அருகிலிருந்தாலும் பொசுங்கி விடும்

தான் என்ற கர்வ கோட்டை தகர்த்து
நாம் என்ற மாளிகையில்
பயணிக்கும் நாள்
விரைவில் உன் வசம் - ஆனால்
விடைதான் விடுகதை இன்றுவரை

ஏமாற்ற மனமில்லை
ஏற்கும் எண்ணம் இருக்குமா தெரியவில்லை
எனக்கொன்றிருந்தால் ஏமாற்றம் இல்லை
எழுதிய விதி எண்ணத்தின் வாசல்
இவளிடமில்லை ..... இறைவனிடம்
இறுதிவரை இம்சித்து பார்

இருக்கிறது ஓரிடம்
இதயத்தில் இறுதிவரை
உன் இனிய ஏக்கம்
இறுதிவரை தொடரும்
இனிய வாழ்வு இனி விரைவில்....

எழுதியவர் : bhanukl (29-Mar-13, 11:19 am)
பார்வை : 132

மேலே