அடுத்த பிறவி
பாழும் மனந்தான்
தாயன்புக்கு தவிக்குதடி!
பெற்ற மனமோ பித்தம்மா
பிள்ளை மனமோ கண்ணீரம்மா!
அடுத்த பிறவி என்றிருந்தால்
இறைவனிடம் மண்டியிடுவேன்
தாயின் கண்ணாய!; தந்தையின் கைபிடித்து
என்றும் பதினாறாய்
அருகிலிருக்க வரமருள்வாய்!
குற்றமென்ன செய்து விட்டேன்
என்பது மட்டும் நானறியேன்!
வாழ்ந்து மறைந்த காலங்களை
கணக்கிட்டால் இறைவன்
கோலம் கண்டு விதிர;விதிர;த்தேன்!
இறைவா!
எழுதி வைத்த தீர;ப்பு
இன்னமும் எத்தனை
பிறவிகளாய் தொடருமோ!
ஒரு பிறவி தாயாய்
மறு பிறவி மகளாய்
வாழ்ந்து மடியும் காலம்
எப்போது?
ஆசை மனம் அறுபட்டு
ஆண்டிரண்டு உருண்டோடியும்
மன ஆவியாய் துரத்துதே!
வந்த வினை
துயர; களைய
அருமருந்து
வேலிருக்க
வினை மட்டும்
மாறி விடும்
நடந்து முடிந்த காலங்கள்
கனவாக இருந்திருந்தால்
காவிய மழையுடன்
கவினுலக அரங்கேற்றத்தில்
கொஞ்சுமொழி வசந்தம்
இடுப்பில்
கொஞ்சிக் கொண்டிருக்கும்!
உடைந்த கண்ணாடி துகளாய்
உருமாறிய வாழ்வு
ஒட்டிய நிலைக்கண்ணாடியாய்!
மாறிய அதிசயம்
காண யாரழுதார; இதைக்காண?
காலம் கனிந்து வருவது
எப்போது?