............ஜன்னல்...........
என் சுவாச வார்த்தைகளை,
எதிர்கொண்டு வரவேற்கும்,
ஜன்னலாயிருந்தாள் !
இடர்பாடுகளின் இடிபாடுகளில்,
என் நிகழ்காலத்தை கேளாமல்,
அடைத்துக்கொண்டாள் தன்னையே !
இங்கே பித்துப்பிடித்திருக்கிறது,
என் உச்சரிப்புகளுக்கு !
எதிர்பார்ப்பில்லாமல் எதிரே,
அடைபட்டுக்கிடக்கும்,
அவள் வதனம் பார்த்து !
ஏற்கமாட்டாளா?
என் பேச்சையும் மூச்சையும் !
எனதருமைக் கண்ணம்மா !!