நீயத்து வையுங்கள் !

படைத்தவனிடம் அழுது கேட்டிடுங்கள்
படி அளப்பவன் அந்த ரகுமானே

தொழுது நின்று வேண்டிடுங்கள் - உங்கள்
தொல்லைகளை நீக்குபவன் அவனே

இரவில் தகஜத் தொழுது நிறைவேற்றுங்கள்
உகப்புடன் அருளை பொழிந்திடுவான்

நபில் தொழுகையை தொழுது செல்லுங்கள்
போகும் வேலைகளை இலகுவாக்குவான்

உண்ணா நோன்பிருந்து உதவி கேளுங்கள்
அளப்பரிய ரஹுமத்தை அள்ளி தருவான்

நீயத்து வையுங்கள் இறைவனை நினைத்து
நிறைவு செய்வான் நினைத்த காரியத்தை

ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (1-Apr-13, 8:23 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 125

மேலே