பணியாளர்களை நேசித்தல் !

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்கள் பணியாளர்கள் உங்களுடைய சகோதர்கள், அவர்களை உங்களுக்குக் கீழே நியமித்தவன் இறைவனே! எனவே, ஒருவர் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் சகோதரர்க்கு தான் உண்பவற்றிலிருந்து உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதைப் போன்றே அவருக்கும் ஆடைகள் அளிக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுக்காதிருக்கட்டும். அப்படி (அவர் சக்திக்கு மீறிய பணியை) கொடுக்க நேரிட்டால் அவர்களுக்கு அப்பணியில் தாமும் உதவி செய்யட்டும்.''
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உம்முடைய பணியாளர் உமக்காக உணவைக் கொண்டு வரும்பொழது, நீர் அவரை உம்மோடு அமர்ந்து உணவருந்த அழைக்காவிடினும், அதிலிருந்து ஒரிரு கவள மேனும் அவருக்கு உணவளிப்பாயாக! அடுப்பின் வெம்மையில் சிரமம் ஏற்று அந்த உணவை சமைத்தவர் அவரே!''
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம்எத்தனை முறை நம்முடைய பணியாளர்களை மன்னிக்க வேண்டும்'' என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். இறைத்தூதர் மவுனமாக இருந்தார்கள். அந்த மனிதர் மீண்டும் வினவினார். மூன்றாவது முறையும் அவர் வினவியதும், ரஸூல் (ஸல்) அவர்கள் விடை பகர்ந்தார்கள்: ''நாளொன்றுக்கு எழுபது முறை (அதவாது அதிகமதிகம்) அவரை மன்னித்து விடுவீராக''
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல் :அபூதாவூதது

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (1-Apr-13, 9:07 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 48

மேலே