முட்டாளின் முதல் நாள்

சத்தியத்திற்கு
தினம் இல்லை
பொய்களுக்கு
தினமும் கொண்டாட்டம்
முட்டாள்களுக்கும்
ஒரு முதல் நாள்
தன்னைப் போல்
மற்றவர்களையும்
நினைத்துக் கொண்டாடும்
மனிதர்களின்
வெள்ளை உள்ள நாள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Apr-13, 9:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே