தோல்வியின் வரிகள் அல்ல வலிகள்....

நானும் அவளும்
காதலித்த பொழுதிலிருந்து
அவள் என்னை இயக்கியதால்
என்னுடன் சேர்த்து
அவளையும் நான்
கவனிக்காமல்
விட்டதன் விளைவு
இன்று
அவளும் நலம்( கணவனறையில் )
நானும் நலம்( கல்லறையில் ).....

அவள் கொடுத்த ஏமாற்றம்
எனக்கு அனுபவம் என்றாலும்
அடுத்த அனுபவம் என்னை
ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காகத்தான்
கண்ணீர் துளியால்
மரண வாகனம் செய்து
கல்லறைக்குப் பயணம் போகிறேன்....

எழுதியவர் : அன்பழகன் (2-Apr-13, 1:01 pm)
பார்வை : 264

மேலே