யோசித்தால் யோசிக்க வைப்பவை (2)

பசிக்கு கொள்ளையடிப்பவனுக்கு ஜெயில்
ருசிக்கு கொள்ளையடிப்பவனுக்கு ஜாமீன் .................

ஆயிரம் தொலைந்தாலும் கவலை படாத நாம்
நடத்துனர் தரவேண்டிய 50 காசுக்கு விடும் சாபம் .....

கோடி சொத்திருந்தாலும் பக்கத்து வீட்டு பரிமளா
வைத்திருந்த ஹேர்பின் தான் மனசுல வரும் ..........

கடவுளா இருந்தாலும் இடம்விட்டு இடம்நகர
மனிதன் அவசியமாகிறான் .........

வாழ்க்கையில் எல்லாமே கற்றுக் கொள்கிறோம்
எப்படி வாழ்வது என்பதை தவிர ..........

நமது மனமென்னும் புல்வெளியில் எப்போது பார்த்தாலும் வேறு ஒருவரின் மாடுதான் மேய்ந்துக் கொண்டிருக்கிறது ....................................

பிள்ளைகளின் பெயில் காலம் முடிந்தது
பள்ளிகள் மீண்டும் திறப்பு ....................................

பெண்கள் பூசுகிற மை உண்"மை"யா ?? பொய்"மை"யா ??

குழந்தைகள் அறிவாளிகளாகத்தான் பிறக்கிறார்கள்
நாம்தான் படி படி என்று சொல்லி முட்டாளாக்குகிறோம் ...............................

உணவுடன் பயத்தை ஊட்டித்தான் வளர்க்கிறோம்
அந்த காலத்தைப்போல் வீரத்தையல்ல .....................

குறையுள்ள மனிதனை இறைவன் படைக்கிறான்
இறைவனை அரை குறையாக மனிதன் படைப்பதில்லை ...................................

கவிதைக்கு வேண்டியது கற்பனை
புத்தகத்துக்கு வேண்டியது விற்பனை ......................

குழந்தையின் பிறப்பு உன்கையிலில்லை அதன்
குணத்தை வளர்ப்பது உன்னிடமே ............

தூங்குகிறவன் எல்லாம் பணக்காரனில்லை
பணக்காரனெல்லாம் தூங்குவதில்லை .....................

என்னை அடிமைபடுத்தினவனின் மொழியில் பேசினால்தான் அறிவாளி என்றால் - நான்
முட்டாளாகவே இருந்துவிட்டு போகிறேன் ..............

................................................................... (தொடரும் )


(லம்பாடி கண்ணன் )

எழுதியவர் : (4-Apr-13, 5:04 pm)
பார்வை : 206

மேலே