சைவமா ? அசைவமா? 50

சைவமா ? அசைவமா?

நானறிந்த அறிவியல்.

ஒரு உயிரினம்
சைவமா ? அசைவமா?
என்று பார்த்த உடன்
சொல்ல முடியுமா?


முடியும் !
கால்களை வைத்து அதை
அறிய முடியும்.
முன் புறகால் முன்பக்கமாக
மடிந்தால் சைவம்.
முன்புறக்கால்
பின்புறமாக
மடிந்தால்
அது அசைவம்.

பின்னங்கால்களின் மீது
அமர்ந்தால் அசைவம்.
ஓடிய பின் மூச்சிறைத்தால்
அது அசைவம்.
ஓடிய பின்
வாயில் நுரை தள்ளினால்
அது சைவம்.
வயிறு ஒட்டியிருந்தால்
அசைவம்.
வயிறு பெருத்திருந்தால்
அது சைவம்.
(ஜீரண அறைகள்
ஒன்றுக்கு மேலிருப்பதால்)
அசைவ உண்ணிக்கு
கால்பாதங்கள்,விரல்,நகம் இருக்கும்.
தாவர உண்ணிக்கு
காலில் குளம்புகள் இருக்கும்.
அசைவ உண்ணி கால்கள் மடிந்து
முன்புறம் நீட்டப்பட்டிருக்கும்.
தாவர உண்ணியின் கால்கள்
பின்புறமாக மடிக்கப்பட்டு
வயிற்றின் பக்கமாக இருக்கும்.
அசைவத்தின் பாதங்கள்
நிலத்தில்
படிந்திருக்கும்.
சைவத்தின் கால்கள்
நிலத்தில் குத்திவைத்தன
போல் இருக்கும்.
சரியா பாருங்கள்.

ஜோசப் கிரகரி ரூபன்.
06.04,13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (6-Apr-13, 6:43 pm)
பார்வை : 114

மேலே