சமூக அவலங்கள்

ஆண்டே என்பதும் ,
அடிமை என்பதும் ,
ஆளுக்கொரு ஜாதியால் ஆடிவைப்பதும் !

அதிகாரம் செய்து லஞ்சம் கேட்குது
அதிகாரிகள் கூட்டம் !

ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி ,
சாமியார் மடமெல்லாம் ஜோராய் நடக்குது ,
அங்கே நடக்கும் ஆனந்த பூஜையில் ,
அசிங்கமும் நடக்குது அதிர வைக்குது !

பொதுநல பதவி,
சுயநல வேட்டை ,
கோடிகள் அல்லும் கேடி அரசியல் !

மரங்கள் சாய்ந்ததால் ,
மழையும் குறையுது ,
மனிதன் சாய்ந்ததால் ,
ரத்த வெள்ளம் பெருகுது !

இரைச்சல் பெருகுது ,
அமைதி குறைந்தது ,
நாகரீக வாழ்க்கையில் நரகமே கிடைத்தது !

வளர்ச்சியை நோக்கிய ,
தொழிலக வளர்ச்சி ,
வான் முட்ட நீளுது புகை மண்டலம் ,
சுவாசிக்கும் காற்றும் மூச்சை அடைக்குது !

மூன்று போகம் விளைந்த பூமி
வாயை பிளந்து வெடித்து கிடக்குது
எல்லைகள் தாண்டி பாயும் நீரையும்
எல்லைகள் போட்டு தடுத்து வைக்கிறான் !

இளைஞனை கொள்ளும் போதை பழக்கம்
அரசுக்கு வருவாய் அதிகம் இருக்காம்
எதிர்காலம் நோக்கும் இந்திய தூண்களை
நிகழ்கால அரசுகள் வீணாய் ஆக்குது !

சமூக அவலங்கள் பல பல உண்டு
என்னில் தோன்ற இங்கே உரைக்கிறேன்
நாமும் மாறி நாட்டையும் மாற்றி
ஏற்ற கொண்டு செல்வோம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Apr-13, 4:12 pm)
பார்வை : 114

மேலே