பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவது தான்..! செப்பினார் ரிசர்வ் வங்கி கவர்னர்..!
பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவது தான்..! செப்பினார் ரிசர்வ் வங்கி கவர்னர்..!
கர்நாடக தொழில்-வர்த்தக சபை கூட்டம் நடைபெற்றது பெங்களூருவில், இந்தக் கூட்டத்தில் தான் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளினார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
2010 - 2011 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. 2012 - ம் ஆண்டு மிதமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்ததற்கு உணவுப்பொருட்கள் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதே காரணம். உணவுப்பொருட்கள் விலைதான் ஒட்டுமொத்த பணவீக்கத்துக்கு வழிவகுத்தது.வருமான முறையில் ஏற்பட்ட மாற்றம் உணவுப்பொருட்கள் வாங்கும் தேவையை அதிகரித்தது.
கிராமப்புறங்களில் கூலி வேலைகளுக்கு செல்கிறவர்களின் கூலி ஆண்டுக்கு 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் கிராமப்புற மக்களின் சாப்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களும் கூடுதலாக முட்டை,இறைச்சி,பால்,காய்கறிகள், பயறுகள், பழங்கள் ஆகியவற்றை இப்போது சாப்பிடுகின்றனர்.
எப்படி இருக்கிறது கதை..? மாண்டேக் சிங் அலுவாலியா திட்டக் கமிசன் தலைவராக இருக்கட்டும்...வாய்களை திறந்தாலே அப்பட்டமாக ஏழை எளிய மக்களை நக்கல் அடிப்பதில் உச்சத்தில் இருப்பவர்கள்.
பிரதமர் மன்மோகன் சிங் தனது திருவாயை திறந்தாலே அது நாட்டில் உள்ள எளிய மக்களை தூக்கிப் போட்டு மிதிக்கும் அளவிற்கு வாய்களை திறப்பார்.
தற்பொழுது சுப்பாராவ் அவர்களும் களத்தில் குதித்துள்ளார். ஏழை பண்டாரங்கள் சத்தான சாப்பாடுகளை சாப்பிடுவதால் பணவீக்கம் ஏற்படுகிறது...பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் இந்த பண்டார பரதேசிகளை முடிந்தால் பட்டினியோடு இருக்குமாறு வலியுறுத்துவோம்...
அல்லது கூலும் களியும் தின்று கொண்டு இருந்தாலே பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று சொல்கிறார் சுப்பாராவ்...!
சங்கிலிக்கருப்பு

