(11) தந்திர காட்டில் நான் (2)விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்
=============(தொடர்ச்சி )=============
(2) விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்
அன்பே எங்களை
பெருக்கிட
சிறு பறவைகள் உதவும்
-பருவ மாற்றங்கள்
உதவும் -சுனாமியும்
உதவும் -சுடுகின்ற
சூரியன் உதவும்
பூகம்பம் உதவும்
புயல் காற்றும்
உதவும்
அன்பே உங்களை
பெருக்கிட செயற்கை
அறிவியல் உதவலாம்
இயற்கை அறிவியல்
உதவுமா ?
இயற்கை உதவாத
உங்களுக்கும் இயந்திரத்திற்கும்
வித்தியாசம்
என்ன ?
இரவை கவ்வாத
விடியலால் அன்பே
பயனும் என்ன ?
ஸ்தம்பித்த நானோ
தப்பிக்க எண்ணி
பரிகாரம் வேண்டி
மரத்திடம் வினவ
கக்கக்கென்று சிரிப்போசை
சலசலவென்று மரமதிலிருந்து
பரவ !!!!!!!!!!
என் மனமதில் மெல்ல
வெக்கம் வந்து கொள்ள !!!!!!!!
வினவியதில் தவறா
விளங்கியதில் தவறா
என்றோர் கலக்கமும்
எனை ஆட்கொள்ள !!!!!!!
===========(தொடரும் )===========
இப்படிக்கு
அன்புதோழன்
கார்த்திக்