யோசித்தால் யோசிக்க வைப்பவை (3)

நமது இன்றைய வேஷத்தை இந்த நாள் தீர்மானிக்கிறது - அதற்க்கான
நடிப்பினை நாம் தீர்மானிக்கிறோம் ................

ஒவ்வொருநாள் காலையில் தேதியை கிழிக்கும் போதும் நேற்று என்னை கிழித்ததை தவிர வேறு எதை கிழித்தாய் என்று ஏளனமாய் கேட்கிறது ..........

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் ஒதுக்கினேன் ...........நான் காய்கறி சந்தையில் ...........

பெற்ற தாயை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு நாயை நடுவீட்டில் வைத்து கொஞ்சுகிறது
நன்றி கேட்ட ஜென்மங்கள் .........................

வீதியில் சைக்கிள் ஓட்டுவதை கேவலமாக நினைக்கும் ஜந்துக்கள் வீட்டிற்குள் சைக்கிள் ஓட்டுகிறார்கள் தொப்பையை குறைக்க -
பவர் ஜிம் சைக்கிள் ...............................

பறவையின் குழந்தைகளையும் இறக்கையை வெட்டிவிட்டு செல்லமாக வளர்க்கிறார்களாம் ......

கணவன் மனைவிக்குள் சண்டை வராமலிருக்க இரண்டே வார்த்தை போதும் ஒன்று "சரி" மற்றொன்று "சாரி" ......................

நாளை வரப்போகும் சந்தோசத்திற்காக இன்றைய வாழ்க்கையை தொலைப்பவனே மனிதன் ...............

இளமையில் ஆரோக்கியத்தை கெடுத்து பணம் சம்பாதிக்கிறோம் -
முதுமையில் பணத்தை கொடுத்து ஆரோக்கியத்தை வாங்கிக் கொள்கிறோம் ............

வாழ்க்கை என்பது ஒரு வெற்று காகிதம்- நீ நினைப்பதை எழுதலாம் -அழிக்கலாம் ..
திமிரெடுத்தால் கசக்கி குப்பைத்தொட்டியிலும் போடலாம் .........காகிதம் கவனம் ........................

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பது அனுபவத்தில் உண்மைதான்
ஒருகாலத்தில் யானைப்படை
தற்போது பூனை படை .....................

இன்றையோ நாளையோ மரணம் நிச்சயம் அறிந்தும் நாம் ஏன் அனுபவிக்காமல் அடுத்த தலைமுறைக்காக சேர்க்கிறோம் .................................

8 நிமிடத்தில் எட்டிவிடுகிறது குழந்தைகளின் வீட்டுக்கனவு
80 வயதாகியும் வாய்ப்பதில்லை நம்மவர்க்கு ..........

மலையை பார்த்து மலைக்றது பெரிய விஷயமல்ல - நம்
மனதை பார்த்து மலைக்க வைப்பதுதான் சிறப்பு ......

மாற்றம் என்பது இருக்கத்தான் செய்கிறது
ஒருகாலத்தில் ஆட்டு உரலிருக்க குழவி சுற்றியது
இன்று குழவி இருக்க உரல் சுற்றுகிறது ................

................................................................... (தொடரும் )


(லம்பாடி கண்ணன் )

எழுதியவர் : (13-Apr-13, 10:50 am)
பார்வை : 473

மேலே