"ஐ லவ் யு அன்பே"......(காதல் வந்த சுவடுகள்)

"ஐ லவ் யு அன்பே"......(காதல் வந்த சுவடுகள்)
===========================================
மூச்சுவிட மறந்தாலும்
முழந்தாள் மண்டியிட்டு
முகம் பார்த்து கேட்கிறேன்
"என்னை காதலிப்பாயா" என்று
========================================
அழகாகவும் சிரிக்கிறாய்,,,
அனலாகவும் கொதிக்கிறாய்,,,
இதற்கு பெயர்தான் "பெண்ணென்பதா"
========================================
காட்டாறு வெள்ளத்தையும்
கணத்தில் கடந்துவிடுகிறேனடி
உன் கண்பார்வையல்லவா
என்னை கந்தல் கந்தலாய் கிழித்திடுகிறது
========================================
போக்குவரத்து காவல் துறையும்
என்னை வலைவீசி துரத்துகிறது
உன்னை துரத்த விதிகளை மீறியதால்
வீதியெங்கும் விளம்பரமானேன்
ஆளுயர சுவரொட்டியால்
========================================
வீதிமுனை பூ வியாபாரிகளும்
தெய்வமாக தெரிகிறார்களே
உன்னை தேவதையாய் பார்ப்பதாலா
========================================
இருச்சக்கர வாகனத்திலும்
தலைக்கவசம் இட மறுக்கிறேன்
உன் புடவை முந்தானையால்
ஒரு மூச்சழுத்த நிகழுவுக்காய்
========================================
மரணமும் உன்னால் என்றால்
காலனோடும் கரம்கோர்த்து விடுகிறேன்
என் காலெண்டர் நாட்களையெல்லாம்
கனவிலே வேகமாக விரட்டுகிறேன்
========================================
ராப்பிச்சைக் காரர்களும்
நண்பர்களாகினர்
ராத்தூக்கம் போனதால்,,

எச்சில் ராகங்களோ
ஏக்கத்தை கொடுக்கிறது,,,

என் புலம்பல்களை
சொல்வதற்கென்றே
காசுக்கொடுத்து வைக்கிறேன்
========================================
காரிருள் சூழ்ந்தும்
கழட்டி வைக்க மறக்கிறேன்

என்னைப்பார்த்த முதல்முறை
உன்னை கேவலமாக சிரிக்கவைத்த
என் கருப்புநிற கண்கண்ணாடியை
========================================
நீ இழிவாய் கருதியதாலோ
என்னவோ புரியவில்லையடி
இருக்கைக்கும் இவன் பாரமாகி
போனதாய் உணருகிறேன்
========================================
உன் முகம் சாய்க்காத
நேரங்களெல்லாம் என்
நெஞ்சில் இருக்கும் ரோமங்களும்
முள்ளாய் மாறி குத்துகிறது
========================================
அனுசரன்....

எழுதியவர் : அனுசரன் (13-Apr-13, 10:52 am)
பார்வை : 260

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே