தமிழ் புத்தாண்டு நல்- வாழ்த்துகள்

நான் கற்ற மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் :
-பாரதி

சில மொழிகளை நான் கற்றதும்
கற்க முயல்வதும் - இடையில்
நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில்:
-நான்..!


என் தாய் ஈன்றதோ :
எங்கள் மூவரை
நீ ஈன்றதோ :
பல மொழிகளை..!


எனைப் பெற்றவள்
என் தாயாக இருக்கலாம் -
ஆனால்,

அவள் கற்றுக் கொடுத்த
முதல் வார்த்தை :
உன்னுடையது..!


என் தாயின்
பிறந்த நாளை
நான் அறியேன்..

ஆனாலும் - நீ பிறந்த இந்நாளே
என் தாயின்
பிறந்த நாளேன்பேன் - எந்தாயே ..!


"இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்"
என் தமிழ் தாயே ..!

எழுதியவர் : மதன்... (14-Apr-13, 11:19 am)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 133

மேலே