வாழ்க்கை வாழ்வதற்கே...!!

இந்த பூமியில் பிறந்த எல்லோருக்கும் வாழ்க்கை இருக்கலாம்
மூடனுக்கு கைகொடுக்க
ஊன்றுகோல் இருக்கிறது
பார்வையிள்ளதவனுக்கு
வார்த்தைகளாய்
அவன் மௌனம் இருக்கிறது!
அழகான உலகம் இது
இங்கு உறவுகள்
ஒருவேளை மறுக்க படலாம்- ஆனால்
வாழும் உரிமையை பறிக்க
யாருக்கும் இங்கு உரிமைகள்
கொடுக்க படவில்லை!
தோல்விகள் என்பது நம்மை சாய்க்கும்
வேராக இருக்கலாம் - நண்பனே!
நீ சாயும் வேளையில்
உதிரும் விதைகளை சேர்த்துவை
நாளை நீ
மீண்டும் மலர்வதற்கு.....
வலிகள் நம்மை கொஞ்சம்
கொஞ்சமாக தின்று
சிலுவை சுமந்து
கல்லறை வரை சுமந்து செல்லும்
பயணமாக வாழ்கையை தோன்ற வைக்கும்-
தோழனே!
நீ வலிகளை சேர்த்து வீணை செய்..
உன் வாசல் வரை வரும் மரணம் கூட
ஒதுங்கி நின்று
உன் வாழ்க்கை பாட்டை ரசிக்கும்!!
வாழ்க்கை வாழ்வதற்கே...
தோல்விகள்
உன்னை பார்த்து சிரிக்கிறது என்றால்
உன்னோடு தோழமை கொள்ள
ஆசை படுகிறது தோழா.!!
வலிகளும்
அவமாங்களும்
ஏமாற்றங்களும்
நம்மை வாழ்கையை
வெறுக்க வைக்கலாம்
- ஆனால்-
வாழ்கையை நீ
கற்றுக்கொள்ள வேண்டுமானால்
வெறுப்பு என்னும் கசப்பும்
ஒரு மந்திரம் தான்...
தோழா!
வாழ கற்றுகொள்
இந்த வாழ்க்கை வாழ்வதற்கே...!!