காற்றின் கனிவு

காற்றென்ற மொழிக்கொண்டு
நான் வடித்த காவியமே
கை உணரும் நீ
கண்ணில் படாமல்
கற்பனை வளர்த்து
காத்திருக்க செய்தாய்!

உன்கொண்டு நானணைய
உறுத்தல்கள் உறுமென்று
ஓரடி தள்ளியே ஒதுங்கி
போகிறாய் என்னவனாய்
எட்டி நின்று ஏக்கத்துடன் !

எத்திசையும் உனக்கென்று
எண்ணமதைக் கொண்டு
எதிர்ப்போரை எட்டியும்
வருவோரை வாரியணைத்தும்
வாசமொன்றை உதிர்த்துச் சென்றாய்!

நீ செல்லும்பாதையில்
தோணியாக நான்வர
தோல்வியே எனக்கில்லையென்று
தொடர்கதை பலசொல்லி
தொட்டணைத்துத் தொடர்கிறாய்!

விண்கொண்ட மேகத்தையும்
சட்டென்று கலைத்து
கண்ணீரை உகுக்கிறாய்
விண்ணோடு பயணிக்க
வியப்புடன் வீதியாகிறாய்!

கையில் அகப்படா நீ
பையில் அடைக்கபட்டதேனோ
உன்கரு தூய்மையானதாலோ
துட்டுக்கு துணை போகிறாய்
மரித்தாலும் மறுஜென்மம் நீதானே!

எழுதியவர் : bhanukl (15-Apr-13, 10:15 pm)
பார்வை : 132

மேலே