வேதனையின் வித்து

குழந்தை செல்வத்துக்கு
கோடியூர் தவமிருக்க
திக்கற்ற திசையிலே
தெருவிளக்காய்
நிலைமாறி உதித்ததென்னவோ?

இல்லை ஒரு பிள்ளை
ஏங்குவோர் பலரிருக்க
ஏளனம் பார்க்கும் இல்லத்தில்
ஏக்கமுடன் மலர்ந்ததென்னவோ?

ஊமை,செவிடு குருடுடென்றுமெ
எட்டித்தள்ளும் இங்கிதமற்ற
இத்தேசத்தில்
இளைப்பாற வந்ததென்னவோ?

அன்பென்றும் அழகென்றும்
வாரியணைக்கும் வம்சவிட்டு
விதியென்று உன்மடியில்
விடையின்றி வீழ்ந்ததென்னவோ?

விட்டுக்கொடுக்கும் உன்னில்
எனை விட்டுச்சென்றதென்னவோ?

தட்டிக் கேட்க ஆளின்றி நீயும் என்னை
தவிக்க விட்டதென்னவோ?

பட்டுபோன மரத்திலே தூளிகட்டி
பரிதவிப்புக்கு ஆளாக்கி போனதென்னவோ ?

குப்பைத்தொட்டியை முகவரியாக்கி
குறும்பு கையில் குழந்தையை கொடுத்ததென்னவோ ?

அடிவயிற்றை பிடி சோற்றுக்கு
அலங்கார பொருளாக
காட்டிச் சென்றதென்னவோ ?

என்னவென்று தவறிழைத்தேன்
ஏதுமறியா பாவி என்னை
வேதனையின் வித்தாய் வீதியிலே
வீசிச் சென்றதென்னவோ....????????????

எழுதியவர் : bhanukl (18-Apr-13, 5:36 am)
பார்வை : 280

மேலே