எனது குறிப்பேட்டின் பக்கங்கள்...[6]
வெளியே மழை
எப்படிப் போவாய் நனையாமல்
என்று புருவம்
உயர்த்தும் பெண்ணே
இந்த மழை
என்னை என்ன செய்திடும்
எப்போதும்
உன் பார்வை மழையில்
நனைந்து பழகியவனை !
[13]
******
இரவுப் பொழுதில்
ஒரு கனவு முட்டையாய்
உன் விழிக்கூட்டில்
விழுந்தவன்
விடியலில் வெளியேறுகிறேன்
நூறு பறவைகளாய்
உன் காதலை பாடியபடி !!
[14]
*********
என் வீட்டு வாசலில்
பாதுகாக்கப்பட்ட பகுதியாக
ஒன்றை அறிவித்து இருக்கிறேன்
வாசல் தளம் அமைத்தபோது
பதிந்த உன் பாதச்சுவடுகள்
அங்கே!
[15]
**********
[ பக்கம் 7..... தொடரும் ]