துப்பாக்கியோடு(குமார் பாலகிருஷ்ணன்)
அகதி முகாமில் அகப்பட்ட
துப்பாக்கியே
போரின் காரணம் என்ன ?
அன்று கியூபாவின்
கரும்புக் காடுகளிலும்
கிழங்குத் தோட்டங்களிலும்
பிடித்து எரிந்த
அதே புரட்சித் தீ
சிங்கள இராணுவத்தின்
சிறிய துப்பாக்கியே
உன் வரலாறு
சொல்ல இயலுமோ ?
ஏன் இயலாது
ரஷ்யாவின் தொழிற்சாலையில்
பிறந்தேன்
இந்தியர்களால்
வாங்கப்பட்டேன்
பின் இலங்கைக்கு
வார்க்கப்பட்டேன்.
உனக்கு பிடித்த நிறம்?
சிவப்பு
நீ அடிக்கடி பார்ப்பது ?
இரத்தம்
பயம் அறிவாயா ?
ஒரு முறை நெஞ்சம் நிமிர்த்தி
வந்த தமிழர்களின்
பச்சை நரம்பு கண்டு . . .
உன் எதிரிகள் ?
தமிழ் உரிமை
பேசுபவர்கள்
உன் சாதனை .
பாலச் சந்திரனை
பத்தடித் தொலைவில்
இருந்து சுட்டது . . .
காந்தியத்தின்
கரம்பிடித்து
நடந்தத தமிழர்களையும்
துப்பாக்கி
எடுக்கத் தூண்டியது . . .
உன் தோட்டாவின்
வேகம் குறைந்ததுண்டா ?
ஒரு மறத்தமிழனின்
மார்பு துளைக்கும் போது
மட்டும்
உன் தோட்டாக்களின்
விளையாட்டு மைதானம் ?
வள்ளுவம் தந்தவர்களின்
வயிறுகள்
இருதயச் சிராய்ப்புகள்
இன்னும்பிற . . .
பெண்களின் வீரம்
பார்த்திருக்கிறாயா ?
கண்ணகியின்
பேத்தி யொருத்தியை
சிங்கள ஓநாய் ஒன்று
விரகம் கொண்டு
ஊளையிட்டு
உடலை தீண்டியபோது
விரட்டியடிக்க
வாளை எடுத்து
நீட்டியபோது . . .
நீ எப்போதாவது
கலங்கியதுண்டா ?
கன்னிவெடித்
தாக்குத லொன்றில்
அன்னை தந்தை
இறந்ததறியாது
ஆடிப்பாடிய அந்த சிறுமி
“மாமா துப்பாக்கி தாங்க
பட்டாசு வெடிக்கணும்னு
சொன்னபோது “