க ..கா ..கி .. காதல் !

க ண்டவுடன் உன் மீது ...
கா தல் கொண்டு மயங்கினேன் ...
கி ளி போல் உதடும் ...
கீ ழ்தண்டு வாழைத்தடல் போல் உடலும் ..
கு ழி விழுந்த கன்னமும் ...
கூ த்தாட வைத்தது மனதை ...
கெ ட்டுப்போனது மனது ...
கே ட்பதில்லை நல்லோர் சொல்..
கை பிடித்து அலைந்தேன் ...
கொ ண்டாட்டம் பல கொண்டாடினேன் ...
கோ மகன் இப்போ வீட்டுக்கோடியில் ..
கௌ ரவம் பறந்து விட்டது மயங்கிய காதலால் ....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (18-Apr-13, 8:24 pm)
பார்வை : 100

மேலே