கவலையை தரும் கடன் .....

அடிப்படை கல்வியை பெற
அளவாய் கடன் பெற்றேன் ...

உயர் தர கல்வியை பெற
உயர்வாய் கடன் பெற்றேன் ....

கடமை உணர்வோடு
கடன்களை திரும்ப செலுத்த எண்ணி

கடன் வாங்கி தொழிற் சாலை அமைத்தேன் ..
சந்தையின் நிலை சரி வர இல்லாததால்
வட்டி கட்ட கடன் வாங்கினேன் ...

வேலைக்கு செல்லும் பெண்ணை மணந்து
கடனிலிருந்து வெளி வர திட்டமிட்டேன் ..

திட்டம் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது ...
மனைவிக்கு கௌரவமான வாழ்க்கை அளிக்க

வாகன கடன்
வீடு வாங்க கடன்
வீடு பொருட்கள் வாங்க கடன் என

கடன் மேல் கடன் வாங்கி கடனாளியனேன்

காலை கடன் பற்றி அறிந்து உள்ளேன் ..
.காலம் தோறும் . கடன் பற்றி இப்போது தான் அறிகின்றேன் ..

கலங்க வைக்கும் கடன்
கற்று தந்தது வாழ்வின்
கண்ணியமான கோட்பாடுகளை ...

அளவாய் ஆசை படுங்கள் ..
அமிர்தமான வாழ்க்கை உங்களிடம்

அன்பை கடனாய் பெறுங்கள் ..
அமைதியை கடனாய் பெறுங்கள்

நல் எண்ணங்களுக்கு வட்டி கட்ட தயாருகுங்கள்
நாளை நமதே என்ற
நம்பிக்கையோடு உழைப்பை முன் வையுங்கள் ..

உயர்வான வாழ்க்கை உங்களிடம் ....

எழுதியவர் : kirupaganesh (20-Apr-13, 11:05 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 202

மேலே