பச்சை குடை

இயற்கை அளித்த
பச்சை குடையை
மடக்கி வைத்தோம்..

கருமேகம் சூழ்ந்ததாக
கார்மேகம் கடந்து சென்றது
மழையும் மாற்றான் வீடு
நோக்கி விரைந்தது..

குடையின் மேலே
கூடாரங்கள் அமைத்துப் பார்த்தோம்
குற்றுயிரும் குலைஉயிருமாய்
பட்டினி கிடக்கிறோம்..

கட்டவிழ்ந்த ஆற்றை கூறுபோட்டோம்
கதறியும் குட்டையை குடிசையாக்கினோம்
நித்தமும் தண்ணீர் கேட்டு தகராறு
நினைத்தால் வேதனை அழுக்காறு..

குடிசைமாற்று வாரியங்கள் கோபுரங்களாயின
குதர்க்கமும் குப்பையும் தெருவில் நடந்தன
சாக்கடை என்று முகஞ்சுழித்தோம்
மழை நாளில் அசாதாரணமாய் ஏறி நடந்தோம்..

உலகை கூறுபோட்டு நாடாக்கினோம்
விளை நிலத்தை கூறுபோட்டு வீடாக்கினோம்
எதை கூறுபோட்டு என் பசி ஆற்றுவாய்?
எதை கூறுபோட்டு என் தாகம் தீர்ப்பாய்?..

எழுதிசெல் உன் வருங்கால சந்ததி நான்
வகையாய் கேட்கும் கேள்விக்கு பதில் ....................................................................???

எழுதியவர் : bhanukl (21-Apr-13, 4:04 pm)
பார்வை : 149

மேலே