நன்றியுள்ள நட்பு

துன்பத்தில் காக்கின்ற
அழகிய மாடம் நட்பு

தன்னை இழந்து
தன்மானம் காக்கும் காவல் நட்பு!

நீ வருந்தி இருக்கையில்
நம்பிக்கை கொடுப்பது நட்பு

நல்லதா, கெட்டதா உன்னை
நல்வழி படுத்துவது நட்பு

கண்ணீர் விழியில் - உனக்கு
கைதாங்கல் முதல் நட்பு

வெற்றியோ தோல்வியோ - உடன்
பகிர்ந்து கொள்வது நட்பு

பெரியவராயினும் சிறியவராயினும்
பெருந்தன்மை கொள்வது நட்பு

கோழைகள் இதயத்தில்
கொள்கைகளை விதைப்பது நட்பு

அவதியுறும் அப்பாக்களையும்
அகத்தில் இருக்கும் அம்மாக்களையும்
அமைதி படுத்துவது நட்பு

எழுதியவர் : நெல்லை பாரதி (21-Apr-13, 7:04 pm)
பார்வை : 393

மேலே