...............எந்தன் தணல்..............
ஏனோ சிலவிசயங்களுக்கு,
உடன்படுவதில்லை மனது !
காரணங்கள் உணர்ந்தேபார்க்காமல் தவிர்த்து !
அப்படி ஒரு கண்ணோட்டம் என்மீது அவளுக்கு !
இங்கே காலம்வரும் என்று எப்படி காத்திருக்கட்டும்?
ஏற்கமாட்டாள் என தீர்க்கமாய்த்தெரிந்தும்,
சரி!
அடங்கிவிடலாம் என அடங்கி கிடந்தாலும்,
ஏன் வதைக்கிறது எனை உறங்கவிடாமல்,
எப்போதும் எரியும் தணல் !!