காதல்-ஓர் அகராதி...........!! காதலில் வென்றவனின் பக்கங்கள்!
காதல் இனிமையானது,
காதலால் காதலிக்கப் பட்டவன் தான்
நானும்,
என் காதலை கடந்து
மண வாழ்வில்
அடிஎடுத்து வைத்த
நான் ,
என் வாழ்வில் பல அடிகளைப்
பெற்றேன்.
என்னை நேசித்தவளும்,
என்னால் நேசிக்கப் பட்டவளும்,
ஏதேதோ சிறுசிறு ஊடல்களுக்காக,
என்னை வசை பாட
மறந்ததில்லை,
தொண்டையில் மாட்டிக்
கொண்ட முள்ளின்
அவஸ்தையை அவளின்
இம்சையில் உணர்கிறேன்!
காதலும்,காயமும் தனக்கு வந்தால் தான்
தெரியும்-------------வலியின் அருமையும்!
பேருந்திலிருந்து தவறான
இடத்தில் இறங்கிவிட்டவன்
தூரத்தில் ஊர்ந்து செல்லும்
பேருந்தை ஏக்கத்தோடு
திரும்பிப் பார்ப்பவனைப்போல்
என் காதலின் வசந்த
காலங்களை ஏக்கத்தோடு
எண்ணிப் பார்க்கிறேன்.
கடந்து வந்த பாதை ஒருவழிப்பாதை!
இது கடவுளின் தண்டனை!
தொலைத்து விட்ட சொந்தங்களை
தேடித்தேடிக் கலைத்து விட்டேன்.
கலைத்துவிட்ட என் மனதிலும்
சோகப்பயிர்கள் முளைத்து விட்டன !!
மனம் ஒன்றி காதலித்த
நாங்கள்
மணத்திற்கு பின் உடல்
ஒன்றிப்போன பின்
காதல் கசந்து விட்டது,
வாழ்க்கை வலித்து விட்டது!
எனைச் சுற்றி உள்ள யாவையும்
இழந்து விட்டேன் என்னைத்தவிர!
அன்பைத்தருபவள் என்று
அனைத்தையும் உதறிவிட்டு
வந்தேன்,
இன்று அவள் அன்பு கூட
எனக்கு தவணை முறையில்தான்,
இருந்தும் ஏதோ வாழ்த்து கொண்டிருக்கிறேன்!
படைக்கப்பட்டவை யாவும்
எனக்காகத்தான் என்றால்
அது..............
பிரம்மாவின் படைப்பில்
உள்ள பிணி அல்ல ,
என் மனதில் உள்ள பிணி.
காதலித்தபோது எதை எதையோ
காதலித்த நாங்கள்,
திருமணம் என்று ஆனபின்பு,
வாழ்க்கையை காதலிக்க வில்லை!
இன்னும் காதலித்துப்
பார்க்க
ஆசைதான்..........
காதலால் காயம்பட்ட என்
இதயத்தை!!