காதல்

கனவில் கலந்து
ஊடல் செய்த என்னை
கண்களால் சிறை
பிடித்தை காதலியே ..............

உன் கரம் பிடித்து
காதல் பல பேசி
மவுனமான நேரங்களை
பேச்சிற்குள் புதைத்துவிட்டு
காதல் செய்த கணம் ...

வான் வழி வந்த வாடை காற்றை
மென்மையாக வாங்கிகொண்டு
வயலில் விழுந்த
காலை நேரத்து பனித்துளியாய்
பரவி கிடந்தேன் உன் இதயத்தில் ...

காரணம் காதல் காதல் ...


பிழை இருந்தால் மன்னிக்கவும் ..

எழுதியவர் : ChellamRaj (23-Apr-13, 5:42 pm)
சேர்த்தது : rajchellam
Tanglish : kaadhal
பார்வை : 126

மேலே