மெய்ஞானம் பரவட்டும்

எத்தனையோ எண்ணங்கள் நம்மில் எழுந்து கொண்டுமாய் மடிந்து கொண்டுமாய் இருக்கிறது .......மிகுந்த சிலரின் எண்ணங்கள்தான் தீ ஜுவாலையாக இன்றும் மனிதனுக்கு வெளிச்சம் காட்டி கொண்டிருக்கிறது .....யாரோ ஒருவன் கல்லை உரசினான் அந்த கல்லில் ஏற்பட்ட நெருப்பு வெளிச்சம் எத்தனையோ கண்டுபிடிப்பகளுக்கு வித்திட்டது ....அதே நெருப்புதான் அந்த நெருப்பு அப்படியே இருக்கிறது ........பயன்படுத்தும் நோக்கங்கள் மனங்களை பொருத்து மாற்றம் அடைந்துவிட்டது குடிசையை எரிக்கும் ஆர்பாட்ட காரர்களாக வடிவம் எடுத்து இன்று அது அணுகுண்டுகளாக வடிவெடுத்து விட்டது ஆயினும் நெய்யுற்றபட்ட விளக்குகள் சாந்தமாக தனது அமைதியை சுவாசித்தவாறு எவ்வளவோ இடங்களில் எரிந்து கொண்டேதான் இருக்கிறது அது தர்காவகட்டும் ,தேவாலயம் ஆகட்டும் ,கோயிலாகட்டும் ,குருத்துவார் ஆகட்டும் .......இப்படித்தான் வாழ்க்கையும் சாந்தமாக அமைய வேண்டும் என்று சொல்லிதந்தவாறு அதை புரிந்து கொள்ள தவறுபவர்கள் வாழ்கையை இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள் நம்பிக்கையை வீணடித்து ஆவதொன்றும் இல்லை மாறாக அந்த நம்பிக்கையை நாம் மனிதநேயத்துக்கு அமைதி அடைவதற்கும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் .....வாழ்கையில் ஒருவனுக்கு நம்பிக்கையை விதைப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை அதே நம்பிக்கையை தகர்ப்பது மிகஎளிது ..............நோக்கம் மறுத்து பேசுவதாக இருப்பதை விட பயன்படும் ,பண்படும் விஷயமாக மாற்றுவதே புத்திசாலித்தனம் ........

மதம் தேவையா ?இந்த கட்டுரையின் அல்லது பகிர்வின் நோக்கம் மதத்தை எந்த வழியாக சென்று அழிப்பது என்பதை விட எந்த வழியில் சென்று புரிந்து கொளவது என்பதுதான் மிக முக்கியம் அப்போதுதான் மதம் மறைந்து மனிதம் மட்டும் வாழும் இயல்பாக மனிதம் மலர வேண்டும் என்றால் மதத்தின் ஊடாகத்தான் பயணிக்க வேண்டும் சற்று புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் நேற்று முளைத்த செடி அல்ல பிடுங்கி வீசி எறிவதற்கு சுமார் 2000 ஆண்டுகால பழமையான மரம் அதன் வேர் அழுத்தமாக பூமியின் அடிவரை பரவி பதிந்துள்ளது ஆகையால் பொறுமையோடு அணுகுவதுதான் சரியான வழி .......
நான் படித்த கதை ஒன்று சொல்கிறேன் கோயிலில் மாட புறாக்கள் குடும்பம் நடத்தி வந்தது ஒரு நாள் கோயிலில் கும்பாஅபிஷேகம் என்பதால் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளபட்டன .கோயில் புறாக்கள் எல்லாம் தேவாலயத்திற்கு இடம் பெயர்ந்து விட்டது ........அங்கும் ஒரு நாள் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வெள்ளைஅடிக்க ஆலயம் சுத்தம் செய்யப்பட்டது அங்கிருந்து தர்காவுக்குள் அடைக்கலம் ஆகின புறாக்கள் .........அங்கு வேலைப்பாடு நடக்கும் போது மீண்டும் கோயிலுக்கு வந்தாகிவிட்டது அதற்குள் கும்பாஅபிசேகமும் முடிவடைந்து இருந்தது ..........ஒரு நாள் கீழே சாலையில் ஒரே இரைச்சல் கோயிலின் மாடத்தில் இருந்து வேடிக்கை பார்த்த புறாவில் குஞ்சுபுறாவொன்று தன் தாயிடம் கேட்டது ,என்ன கீழே ஒரே அடிதடி அம்மா என்று, அதற்கு தாய்புறா சொன்னது மனிதர்களுக்கு மதம்பிடித்துள்ளது என்று .........மதம் என்றால் என்ன ?என்று அந்த சின்ன புறா கேட்க தாய் புறா சொன்னதாம் நம்மை போல் அவர்காளால் ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடதிற்கு செல்ல முடியாது என்று சொன்னதாம் ......ஒரு புறா தேர்ந்தெடுத்த புனிதத்தை மனிதனால் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்பது துரதிஷ்டம் ...........
ஏசுவும்,ஸல்அவர்களும் ,புத்தரும்,சங்கரரும் ,வியாசரும் ,மகாவீரரும் ,குருநானக்கும் இப்படி ஞான பட்டாளமே இந்தியாவில் சந்தித்தும் நாம் வாழ்கையை தவறவிட்டு கொண்டிருப்பதும் ,வாழும் கலையை தவறவிட்டு கொண்டிருப்பதும் நமது மேம்போக்கான அறிவையே காட்டுகிறது ..நுட்பமாக சிந்திப்பவர்கள் இவர்களை பயன்படுத்தி வாழ்கையில் அமைதியை அடையும் வழிகளைதான் யோசிப்பார்கள்.இவர்களின் போதனை நூல்களை தூக்கிஏறிய நினைக்க மாட்டார்கள் .....
கலை அண்ணாவின் தளத்தில் கூறியதை இங்கும் முன்வைக்கிறேன் மதம் தேவையில்லை என்பதற்காக எல்லாவற்றையும் அழித்திட எண்ணுவது சின்ன குழந்தைகள் கோபத்தில் அல்லது ஏமாற்றத்தில் கையில் கிடைக்கும் பொருளை உடைக்குமே அதுபோலதான் .......மனிதர்களுக்கு மதத்தை அழிக்கும் அதன் அடையாளங்களை அழிக்கும் பகுத்தறிவாளர்களை விட மதத்தின் வழியே மனிதனை திருத்த முயலும் புத்திசாலிகள் இன்றைய சூழலில் தேவைபடுகிறார்கள்...... நாஸ்திகவாதிக்கு எந்த தகுதியும் வேண்டாம் எல்லாவற்றிற்கும் பக்கவாட்டில்(horizontally என்று சொல்வார்களே ) தலையாட்டினாள் போதும் அதவாது முடியாது என்பது போல் ,கிடையாது என்பது போல்,தவறு என்பது போல் ,ஆனால் புத்திசாலிதனத்திற்கு இது எல்லாம் செல்லாது விசயத்தை தீர்க்கமாக சொல்லும் தைரியம் வேண்டும் ,திறமை வேண்டும் , தனித்துவம் வேண்டும்,முயற்சி வேண்டும் ,பயிற்சி வேண்டும் ,பொறுமை வேண்டும் அதே சமயத்தில் விவேகமும் வேண்டும் என்னை பொறுத்தவரை நாஸ்திகம் மடத்தனம் அல்லது கோழைத்தனம் உடன்பாட்டு வகையிலான ஆன்மிகமே சிறந்தது அது கோயிலையும் ,தர்காவையும் ,தேவாலயத்தையும் இடித்திட எண்ணாது மாறாக அங்கு சென்று நபிகளையும் ,கண்ணனையும் ,ஏசுவையும் புரிந்திட நினைக்கும் அவர்கள் சொல்ல வந்த விஷயம்தான் என்ன ?என்று தெரிந்துகொள்ள ஏங்கும் .......வள்ளுவர் முதலில் கடவுள் வாழ்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லையே மனிதன் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி சென்றாலே போதுமே .ஏதோ விஷயம் இருக்கிறது எல்லா வேத நூல்களிலும் ........
இன்றைய கோயிலை மசூதியை தேவாலயத்தை உபயோகிக்க ஒரே வழி சரியான போதனைகளை மனித நேயத்தை கருத்தில் கொண்டு வழங்க வேண்டும் .......விஷயம் எளிது ...ஸல் அவர்களை ஐந்து வேலை தொழுகாமல் புரிந்து கொள்ள முடியாது ,சத்தியம் சமிபமாய் இருப்பதில் நம்பிக்கை வைக்காமல் ஏசுவை புரிந்துகொள்ள முடியாது , உனக்கு நீயே வெளிச்சமாய் இருக்கிறாய் என்பதை புத்தரை நம்பாமல் முடியாது ,யோக சாதனைகளை மேற்கொள்ளாமல் கீதை சொல்ல வரும் விசயத்தை புரிந்து கொள்ள முடியாது .....ஆக பயிற்சி தேவை நடுநிலை பக்குவம் தேவை இதைதான் எல்லாம் புனிதஇடங்களும் போதிக்க வேண்டும் மனிதனை மட்டும் கருத்தில் கொண்டு ..........அப்படி செய்தால் மதம் மறைந்து விடும் ....நமது வேலை அழிப்பது அல்ல உருவாக்குவதுதான் ..........இப்போது நினைத்து பாருங்கள் போதிமரம் இங்குதான் இருக்கும் ,ஜோர்தான் நதிகரையும் இங்கேதான் இருக்கும் ..........இன்னும் சொல்வேன் மதம் மறைந்து மனிதம் உடன்பாட்டு வழியில் தளிர்கட்டும் எதிர்மறைவழியில் வேண்டாம் ........

நன்றி
அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (23-Apr-13, 8:57 pm)
பார்வை : 355

மேலே