!!!===(((காதல் தேவதையே...)))===!!!

====(பல்லவி)====

காதல் தேவதையே
உன்னை தந்திடு என்னிடமே...
காதலின் வேதனையை
நான் யாரிடம் கூறிடுவேன்...

வேகுற தீயினிலே தேடுறேன் காதலையே
வேதனை தீரலையே வாடுறேன் தனிமையிலே...

-------------------------------(காதல் தேவதையே)

====(சரணம் 1)====

நீயின்றி வாழ்கின்றேன்
=== ஒவ்வொரு உணர்வும் வலிக்குதடி...
சூழ்ந்தோடும் கார்மேகம்
=== மழையாய் கனவினை பொழியுதடி...
ஆறடி ஆள்பூவே
=== அலைகள் நெஞ்சில் குதிக்குதடி...
தாவணி தாரகையே
=== உனக்குள் கரைந்தே தொலையரண்டி..

புன்னகை பூங்குயிலே... உன்
கண்னகை அதிசயமே...
வின்னக வெண்ணிலவும்... அடி
உன்னிடம் தோற்றிடுமே...

---------------------------------(காதல் தேவதையே)

====(சரணம் - 2)====

நீசொன்ன வார்த்தைகளும்
=== விதையாய் நெஞ்சில் விழுந்ததடி...
மூச்சினிலே தீக்குளித்தே
=== இரவும்கூட கூட எரியுதடி...
ஆழ்கடல் மீன்போலே
=== நிணைவு கடலில் நீந்துறேண்டி...
ஆசைகள் ஆயிரம்
=== நீவரம் தந்தால் தீருமடி...

சந்தன தாமரையே... நீ
பொன்னந்தி பூநிறமே...
கவிதைகள் தருகின்ற...என்
காதல் நூலகமே...

---------------------------------(காதல் தேவதையே)

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (25-Apr-13, 9:46 am)
பார்வை : 120

மேலே