ஹைக்கூ சரவெடி -10

நாணும் பெண்மையோ
தலைகுனியும் வெட்கத்தில்
நாணல்
-----------------------------------------------------------
புள்ளி வைத்தது
கோலம் போடவா
விண்மீன்
------------------------------------------------------------
கல்வி சுமைதான்
சுமக்கும் சிறுவர்கள்
கட்டாய தண்டனை
------------------------------------------------------------
ஓட்டைதான் ஒழுகவில்லை
சிலந்தியின் வீடு
என் வீட்டுக்குள்
------------------------------------------------------------
வயிற்றில் பசி
வயிறு நிரம்பியும்
கர்ப்பிணி பெண்
-------------------------------------------------------------

எழுதியவர் : rudhran (25-Apr-13, 4:50 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 79

மேலே