............உயிராடல்...........

என்றோ படித்து ரசித்து,
நினைவை நீங்கிய ஒரு கவிதையை,
நினைவுபடுத்தியது உன் உரையாடல் !
வரிகள் நினைவுக்கு வரவில்லை !
வந்தது அது தந்த நெகிழ்ச்சியும் பரவசமும் !
அடிக்கடி இனி பேசு என்னுடன் !
அதுகாறும்,
கவித்தூறலில் களைப்பாறும் என் நிழல் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-Apr-13, 7:27 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 72

மேலே